close
Choose your channels

தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம்: விஜயகாந்த் திடடம் என்ன? 

Tuesday, March 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக , திமுக, என மாறி மாறி இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக இன்னும் எந்த கூட்டணியில் இணையவுள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம், விஜயகாந்தை நேரில் சந்தித்த பின்னரும், இருதரப்பில் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் கருத்து கேட்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கூட்டணி குறித்த இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.