விஜயகாந்த் உடல்நலம் குறித்து தேமுதிக அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளி வந்துள்ளன. மேலும் அவருக்கு மருத்துவர்களின் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை வெளியாகும் என்றும் தகவல் வெளியானது

இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. தலைமை கழகத்தின் இந்த அறிக்கையை அடுத்தே தேமுதிக தொண்டர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மருத்துவர் கூறியபடியே மீண்டும் பொலிவான ரைசா முகம்: மன்னிப்பு கேட்பாரா?

சமீபத்தில் அழகுகளை மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சை காரணமாக தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதற்காக ஒரு கோடி ரூபாய் மருத்துவர் தனக்கு நஷ்ட ஈடு அவர் கொடுக்க வேண்டும்

ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட விக்னேஷ் சிவன் -  நயன்தாரா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தி வருகிறது

விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இயக்குனர் ஷங்கர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்!

கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களும் திரை உலகைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும் கொரோனா பாதிப்பு, மாரடைப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக காலமாகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 

ஓடிடியில் ஏ.ஆர்.ரஹ்மானின் '99 சாங்ஸ்”: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் முதன்முதலாக கதை எழுதி தயாரித்த திரைப்படம் '99 சாங்ஸ்”. இந்த படத்திற்கு அவரே இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் படம்