மருத்துவர் மாட்டுச் சாணம் சாப்பிடும் வீடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,November 18 2021]

ஹரியாணாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் வீடியோவில் மாட்டுச்சாணத்தை சாப்பிட்டுக் காட்டி இது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என விளக்கம் அளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இந்தியாவில் மாட்டுச் சாணம், கோமியம் போன்றவை மருத்துவக் குணம் வாய்ந்தது என்ற நம்பிக்கை பொதுவாகவே இருந்துவருகிறது. இந்த நம்பிக்கைக்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற நம்பிக்கை எல்லா ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறது. மேலும் இதை பொதுமக்களும் நம்பி தங்களது அன்றாடப் பழக்க வழக்கங்களில் இதைப் பயன்படுத்தவும் செய்கின்றனர்.

இந்நிலையில் ஹரியாணா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்பவர் பசுமாட்டின் சாணம், கோமியம் போன்றவை உடல்நலத்திற்கு எவ்வளவு நல்லது எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் நேரடியாக மாட்டுச்சாணத்தை சாப்பிடவும் செய்கிறார்.

அதோடு கர்ப்பமான பெண்கள் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் நார்மல் டெலிவரியே நடக்கும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் பஞ்சகவ்வியத்தின் ஒவ்வொரு பொருளும் மிக உயர்வானது, மாட்டுச் சாணத்தைச் சாப்பிட்டால் நம் உடல், மனம், ஆன்மா எல்லாம் சுத்தமாகும் எனக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படித்த மருத்துவர் மனோஜ் மிட்டல் மாட்டு சாணத்தைச் சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அறிவியலில் இல்லாத ஒரு விஷயத்தை அவர் எப்படி சொல்லலாம்? உண்மையிலேயே அவர் மருத்துவம் படித்தவர் தானா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More News

டிசம்பரில் பாடல்கள்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

டிசம்பரில் தான் இசையமைக்கும் படத்தின் பாடல்கள் வெளியாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

நீ என்ன பெரிய அப்பாடக்கரா? உன்னை வச்சு செய்றேன்: நிரூப்பிடம் சவால் விடும் வருண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 46வது நாளாக நடைபெற உள்ள நிலையில் இன்றைய முதல் இரண்டு புரமோக்களிலும் இசைவாணி மற்றும் தாமரை ஆகிய இருவருக்கு இடையே நடந்த மோதல் குறித்து பார்த்தோம்.

பல லட்சத்தை ஏமாற்றி, மிரட்டல் விடுத்ததாக நடிகை சினேகா போலீசில் திடீர் புகார்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சினேகா தன்னிடம் இருந்து ரூ.26 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு

நயன்தாராவை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து

வார்த்தைகளால் கொஞ்சி நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை