விவேக் இறப்பிற்கு மருத்துவர்கள் தெரிவித்த காரணம்!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

சின்ன கலைவாணர் என திரையுலகினர்கள், ரசிகர்களால் போற்றப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தது திரையுலக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

அவரது உடல் சற்று முன்னர் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விரைவில் அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விவேக் உயிரிழப்பு குறித்து மருத்துவர்கள் கூறிய காரணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியபோது ’அவருக்கு LAD (left anterior descending artery) இடது  இதய தமனியில் 100% அடைப்பு இருந்ததே விவேக்கின் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்., இதனால் அவருக்கு வலிமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் தான் அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

More News

விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் கோலிவுட் பிரபலங்கள்

பிரபல காமெடி நடிகர் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 

மாரடைப்பால் சிகிச்சை பெற்ற நடிகர் விவேக் காலமானார்: கோலிவுட் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்....! விவசாயிகள் பெரும் வேதனை...!

தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், அதை பறித்து ஏரியில் கொட்டி வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்.

முகக்கவசம் போடலனா அபராதம்...!உபி...யில் லாக்டவுன்...!

உத்திரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுந்தர் சி: குஷ்பு வெளியிட்ட புகைப்படம்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் கணவருமான சுந்தர் சி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பதும்