close
Choose your channels

டிரம்ப் தொடுத்த சட்டப் போராட்டம் என்ன ஆனது??? அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்?

Friday, November 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிரம்ப் தொடுத்த சட்டப் போராட்டம் என்ன ஆனது??? அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்?

 

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரே நாளில் முடிவுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் கடந்த பின்னரும் இறுதியான தேர்தல் முடிவு இன்னும் வெளியாக வில்லை. இதற்கு அடிப்படை காரணம் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தபால் ஒட்டுகளில் குளறுபடிகள் நடைபெற்று இருக்கிறது எனத் தொடர்த்து வலுவான குற்றச்சாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் உள்ள 538 தொகுதிகளில் ஜோ பைடன் 264 இடங்களில் வெற்றிப்பெற்று இருக்கிறார் எனவும் டிரம்ப் 214 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கையைத் தொடரக் கூடாது என டிரம்ப் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

மேலும் பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன் போன்ற மாகாணங்களில் தபால் ஓட்டுகளை எண்ணக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறார் டிரம்ப். இந்த வழக்குகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் இல்லை என்றே ஜனநாயகக் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில் ஜார்ஜியா, மிச்சிகன் மாகாண நீதிமன்றங்கள் வாக்குச்சீட்டுகள் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு எந்த பூர்வாங்க ஆதாரமும் இல்லை என தெரிவித்து உள்ளன.

இதனால் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் அதிரடியான முடிவு குறித்து குடியரசு கட்சியினர் இதுவரை எந்த கருத்துகளையும் வெளியிட வில்லை. இதையடுத்து ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா ஆகிய 3 மாகாணங்களில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்வதில் இந்த மாகாணங்களில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படும் நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையை அக்கட்சியினர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நெவடா மாகாணத்தில் ஜோ பைடன் குறைந்த வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியாவில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். அதேபோல மிச்சிகன் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் தான் தொடுத்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோட்டை நாட இருப்பதாகவும் டிரம்ப் அறிக்கை வெளியிட்டு உள்ளார். மேலும் பல இடங்களில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தற்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோ பைடனின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து நடத்துமாறு பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இத்தனை குளறுபடியான சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் இந்த வார இறுதிக்குள் எதிர்ப்பார்க்க முடியாது என வாஷிங்கடனில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜோ பைடன் தற்போது முன்னிலையில் இருந்தாலும் தனது வெற்றியை அறிவிக்கவோ அல்லது அதிகாரத்தில் அமரவோ முடியாது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் நாங்கள் வெற்றியாளர்களாக இருப்போம் என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து வருகிறார் ஜோ பைடன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.