close
Choose your channels

கேப்டன் மகனுக்கு கிடைத்த டபுள் சர்ப்ரைஸ்.. விஜயகாந்த் இருந்திருந்தால் கூட இப்படி நடந்திருக்குமா?

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு டபுள் சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது. விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால் கூட இப்படி ஒரு சர்ப்ரைஸ் அவருக்கு கிடைத்திருக்குமா என கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மதுரவீரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ’படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளில் இரண்டு சர்பரைஸ்கள் அவருக்கு கிடைத்துள்ளது.

முதலாவதாக சண்முக பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து ’படைத்தலைவன்’ படக்குழுவினர் இந்த படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சண்முக பாண்டியன் ’படைத்தளபதி குழுவினர் எனக்கு சர்ப்ரைஸ் ஆக இந்த பிறந்தநாள் வீடியோவை வெளியிட்டுள்ளனர், அவர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் ’படைத்தலைவன்’ காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை போல் இன்று சண்முக பாண்டியன் பிறந்தநாள் அடுத்து அவரது சகோதரர் விஜய பிரபாகரன் விலை உயர்ந்த ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன

சண்முக பாண்டியன் பிறந்த நாளில் அவர் நடித்த படத்தின் டீசர் மற்றும் அவரது சகோதரரால் வழங்கப்பட்ட கார் ஆகிய இரண்டு சப்ரைஸ்கள் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. விஜயகாந்த் இருந்திருந்தால் கூட இப்படி இரண்டு சர்ப்ரைஸ் கிடைத்திருக்குமா என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment