close
Choose your channels

கிளாமரின் உச்சத்திற்கு சென்ற ராஜசேகர் - ஜீவிதா மகள்.. பிறந்த நாளில் ஒரு குளுகுளு போட்டோஷூட்..!

Sunday, April 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலக நட்சத்திர தம்பதிகள் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா ஆகிய இருவரும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் அவர்களில் சிவாத்மிகா என்பவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தயாரிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவாத்மிகா நேற்று தனது 23 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் பிறந்த நாளில் எடுத்த பிரத்யேக போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் அவர் கிளாமர் உச்சத்திற்கு சென்றுள்ளது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிறந்தநாளில் ஒரு குளு குளு போட்டோ ஷூட் கொடுத்த சிவாத்மிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாக இருக்கும் தமிழ் திரைப்படத்தில் சிவாத்மிகா நாயகியாக நடிக்கவுள்ளார். இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சிவாத்மிகா, சேரன், விஜய் டிவி ஜாக்குலின், பிக்பாஸ் சரவணன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பதும் சித்து குமார் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment