பேருந்தில் பைரவா' படம். அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. கடந்த குடியரசு தின விடுமுறை தினத்தில் பல திரையரங்குகளில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை ஓமலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஒளிபரப்பப்பட்டதாக அந்த பேருந்தில் பயணம் செய்த விஜய் ரசிகர் ஒருவர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலை அடுத்து தாரமங்கலம் அருகே விஜய் ரசிகர்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதித்தனர். திருட்டு டிவிடிக்கு எதிராக ரசிகர்களே களமிறங்கியுள்ளது ஆரோக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது

More News

நயன்தாராவின் 'டோரா' ரிலீஸ் தேதி?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள திகில் மற்றும் மர்ம திரைப்படமான 'டோரா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ருதிஹாசன்..

உலக நாயகன் கமல்ஹாசன் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த தடை. காவல்துறை அதிரடி

உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவில் கடந்த வாரம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது.

கார்த்திக் நரேனின் 'நரகாசுரனில் சூப்பர் ஹிட் ஹீரோ?

'துருவங்கள் 16' படத்தின் மூலம் தான் ஒரு திறமையான இயக்குனர் என்று நிரூபித்த 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன், நேற்று தனது இரண்டாவது படத்தின் டைட்டில் 'நரகாசுரன்' என்பதை வெளியிட்டார் என்பதை பார்த்தோம்

சிம்புவின் 'AAA' ரிலீஸ் எப்போது?

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது வலுவான ஆதரவை கொடுத்த நடிகர் சிம்பு, இந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்து படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணியை விரைவில் தொடங்கவுள்ளார்.