close
Choose your channels

நயன்தாராவின் 'டோரா' ரிலீஸ் தேதி?

Saturday, January 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள திகில் மற்றும் மர்ம திரைப்படமான 'டோரா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
'டோரா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
பிரபல இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். இவர்களுடைய இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும், 'ரா ரா ரா' என்ற இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என்ற செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.