close
Choose your channels

'த்ரிஷ்யம்' குட்டிப்பாப்பாவா இது? வைரலாகும் கிளாமர் வீடியோ!

Wednesday, May 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ’த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்திருந்தார் எஸ்தர் அனில். அந்த படத்தில் குட்டிப் பாப்பாவாக நடித்த இவர் அவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளும் அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’த்ரிஷ்யம்’ திரைப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து அந்த படத்தில் குட்டி பாப்பாவாக இருந்த எஸ்தர் அனில் தற்போது குமரியாக மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பதும் அவை வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் எஸ்தர் அனில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கருப்பு உடையில் கிளாமராக தோற்றமளிக்கும் அவரது இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.