'இந்தியன் 2' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு? தனுஷ் படத்திற்கு அடித்த ஜாக்பாட்.. ஓப்பனிங் வசூல் அள்ளுமா?

  • IndiaGlitz, [Sunday,May 05 2024]

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ மற்றும் தனுஷ் நடித்த ’ராயன்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது ’இந்தியன் 2’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக கூறப்படுவதால் ராயன்’ சோலோவாக ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இதே தேதியில் தான் தனுஷ் நடித்து இயக்கி உள்ள ’ராயன்’ படமும் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து தனுஷின் ’ராயன்’ ஜூன் 13ஆம் தேதி சோலோவாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ‘ராயன்’ ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூட விஷாலின் ’ரத்னம்’ மற்றும் சுந்தர் சியின் ’அரண்மனை 4’ ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் ’அரண்மனை 4’திரைப்படம் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டதால் ’ரத்னம்’ படம் சோலோவாக ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனுஷின் படமும் ’ராயன்’ சோலவாக ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ’இந்தியன் 2’ ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமை காப்போம்.

More News

7 மொழிகளில் ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் தமிழ் சீரியல்.. இதுதான் முதல் முறை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் முதல் முறையாக 7 மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'கில்லி'யை அடுத்து நயனுடன் விஜய் நடித்த படம் ரீரிலீஸ்.. தளபதி பிறந்தநாளில் வெளியிட திட்டம்..!

தளபதி விஜய் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் புதிய படங்களுக்கு இணையாக மூன்று வாரங்கள் திரையரங்குகளில்

டூ பீஸ் பிகினி உடையில் சூர்யாவின் 'கங்குவா' நாயகி.. கடலோரத்தில் ஒரு கிளாமர் போட்டோஷூட்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தில் நாயகியாக நடித்து வரும் திஷா பதானி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபிஸ் நீச்சல் உடையில் கடலோரத்தில் எடுத்த ஜாலியான

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்.. இனிமேல் அவ்வளவுதான்.. கோமாளி அறிவிப்பு..!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அடுத்தடுத்த எபிசோடு வெளியானது என்பதும் இரண்டு வாரங்களுமே பார்வையாளர்களை கவரும்

சொன்ன சொல்லை காப்பாற்றாத அர்ச்சனா கல்பாத்தி.. என்ன ஆச்சு?

பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  தனது அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 12 மணிக்கு மேல் ஆகிவிட்ட