பா.ரஞ்சித் இயக்கும் 'சல்பேட்டா' நாயகி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 19 2020]

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரரின் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கவுள்ளார் என்பதும் குத்துச்சண்டை கேரக்டருக்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து உண்மையான குத்துச்சண்டை வீரர் போல் தனது உடலை மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக துஷாரா என்ற நடிகை நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இவர் கடந்த ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவர் போல்டான வடசென்னை பெண்ணாக நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் கலையரசன் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் முரளி ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது 

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதை தொடர்ந்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை: வித்தியாசமான பெயர் வைத்த பெற்றோர்

'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன்பின்னர் 'மெட்ராஸ்' 'கபாலி' 'காலா' ஆகிய படங்களை இயக்கினார்.

கொரோனா அறிகுறி நோயாளி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து இதுவரை 150க்கும் மேற்பட்டோர்களை தாக்கியுள்ளது.

கொரோனா: பரவாமல் தடுப்பது எப்படி??? தீக்குச்சி உணர்த்தும் விழிப்புணர்வு வீடியோ!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பரிந்துரைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

எந்த வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம்..?! சீன மருத்துவர்கள் விளக்கம்.

வைரஸ் தொற்று எந்த வகை இரத்தம் இருந்தாலும் ஏற்படும் என்றாலும் 'ஏ' பிரிவு இரத்தம் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.