இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை: பெரும் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,April 09 2024]

இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூபாய் 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட இயக்குனர் அமீர் சமீபத்தில் டெல்லி சென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானார் என்பதும் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரான சில நாட்களில் இயக்குனர் அமீருக்கு சொந்தமான இடங்களில் இன்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தி நகர் அமீர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை நடைபெறுவதாகவும் இந்த கார்டன் இல்லத்தை இயக்குனர் அமீர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய அமீர் வீட்டுக்கு சென்ற போது அவருடைய வீடு பூட்டி இருந்ததாகவும் அதன் பிறகு 10 நிமிடங்கள் காத்திருந்து அமீர் வந்தவுடன் சோதனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அமீர் அலுவலகம் மட்டுமின்றி இன்று காலை 7 மணி முதல் சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

2 படங்களையும் முடித்துவிட்ட கார்த்தி.. அடுத்தது சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம் தான்..!

நடிகர் கார்த்தி தற்போது தான் நடித்துக் கொண்டிருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் 'இந்தியன்' நாயகியை சந்தித்த ஷங்கர்.. எமோஷனல் பதிவு..!

ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் நாயகியை அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'கோட்' படத்தில் சிஎஸ்கே ரசிகராக நடிப்பது இந்த பிரபலமா? தரமான சம்பவம் இருக்குது..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் சிஎஸ்கே அணியின் ரசிகராக பிரபலம் ஒருவர் நடித்திருப்பதாக தகவல் வெளிவந்திருப்பதை அடுத்து இந்த படத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய பரிசு.. ரூ.35 லட்சம் மதிப்புடையதா?

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு நடிகர் அஜித் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசை வழங்கி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தலைவர் 171' திரைப்படத்தில் இந்த 5 பிரபலங்களா? மல்டி ஸ்டார் படம் என உறுதி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171' படத்தில் 5 பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.