close
Choose your channels

கவினின் 'ஸ்டார்' படத்தின் முக்கிய காட்சியின் மேக்கிங்.. இயக்குனர் இளன் வெளியிட்ட வீடியோ..!

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் இளன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கவின் நடிப்பில், இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது என்பதும், 12 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்தது என்பதும் தெரிந்தது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் எதிர்பார்ப்பை முழுமையாக இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் வசூல் அளவில் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த வெற்றி படமாக கருதப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் மூலம் இயக்குனர் இளன் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு இயக்குனராக மாறிவிட்டார் என்பதும் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் இளன் சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ஸ்டார்’ படத்தில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். கவின் மொட்டை தலையுடன் முகத்தில் காயத்துடன் இருக்கும் காட்சியை படமாக்கிய போது அவரை மொட்டை தலையாக மாற்றியது எப்படி என்பது இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கவின் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’ப்ளடி பெக்கர்’ சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment