ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

நாளை நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தேர்தல் அதிகளவிலான பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த தொகுதியில் தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை தேர்தல் ஆணையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளின் படியும், மத்திய அரசின் ஆலோசனையின்படியும் நடத்தப்படும் என்று இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

More News

ரம்யாகிருஷ்ணனிடம் ராஜமெளலி மன்னிப்பு கேட்டது ஏன்?

'பாகுபலி' என்ற ஒரே படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்ட பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய திரைப்படமான 'பாகுபலி 2' படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகாமி என்ற கேரக்டரில் மிக அற்புதமாக நடித்த ரம்யா கிருஷ்ணனிடம் இயக்குனர் ராஜமெளல&

ராதிகாவின் ராடன் மீடியாவில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அம்மா வேட்பாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று அறிவித்த அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டனர்...

இன்று முதல் 'வடசென்னை', வெள்ளி முதல் 'பவர்பாண்டி'

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா மற்றும் பலர் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வரும் வெள்ளி முதல் உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

கணவர் அழகாக இல்லை. திருமணமான 8 நாளில் கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி

'கொலையும் செய்வாள் பத்தினி' என்று பழைய பழமொழி உண்டு என்பது அனைவரும் அறிந்ததே...

'நண்பன்' பட பாணியில் வாட்ஸ் ஆப் உதவியால் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்

இளையதளபதி விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மருத்துவ மாணவியான இலியானா கூறும் டிப்ஸ் மூலம் விஜய் பிரசவம் பார்த்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நாக்பூர் அருகே ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கு மருத்துவ மாணவர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் சீனியர் மருத்துவரின் உதவ