மீண்டும் ஒரு எலிமினேஷன் லிஸ்ட்: பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

இன்றைய பிக்பாஸ் புரமோ வீடியோவில் இரு அணிகள் தங்கள் பலத்தை கயிறு இழுக்கும் போட்டியில் நிரூபிப்பது போல் உள்ளது. ஒருபக்கம் சினேகன், கணேஷ், வையாபுரி, ரைசா மற்றும் பிந்துமாதவி. இன்னொரு பக்கம் ஆரவ், ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி. வழக்கம் போல் இந்த டாஸ்க்கிலும் ஓவியாவை காணவில்லை. இதில் சினேகன் அணி வெற்றி பெறுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் ஓவியா, ஜூலி, வையாபுரி ஆகியோர் இருக்கும் நிலையில் தற்போது கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற அணியிடம் தோல்வி அடைந்த அணியில் இருந்து மேலும் ஒருவரை எலிமினேட் செய்ய பிக்பாஸ் கருத்து கேட்கிறார். ஜூலி ஏற்கனவே எலிமினேஷன் லிஸ்ட்டில் இருப்பதால் சக்தி, காயத்ரி மற்றும் ஆரவ் இவர்கள் மூவரில் ஒருவரை வெளியேற்ற வேண்டுமானால் யாரை வெளியேற்றுவது என்று பிக்பாஸ் தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கிறார்.

இதில் பிந்துமாதவி சக்தியையும், ரைசா ஆரவ்வையும், கணேஷ் சக்தியையும் கூறுகின்றனர். மொத்தமாக மூன்று பேர்களையும் அனுப்பினால் நல்லது என்று வையாபுரி கூறுகிறார். ஏற்கனவே மூன்று பேர் எலிமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்களில் ஒருவரும் புதியதாக ஒருவரும் வெளியே அனுப்பபடுவாரா? அப்படியானால் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்படுவார்களா? என்பது குறித்த விபரங்கள் இன்றைய நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தால் தான் தெரியும்.

More News

அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன் நடிக்கும் 'மாட்டுக்கு நான் அடிமை'

ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தாலும் வந்தது ஜல்லிக்கட்டை மையமாக வைத்தே பல படங்களின் போஸ்டர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த பொதுமக்களின் ஆதரவு இந்த படங்களுக்கும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

ஆரவ்வுக்கு வையாபுரி கூறிய சாட்டையடி அறிவுரை

பிக்பாஸ் குடும்பத்தில் இருக்கும் பலர் நேரத்திற்கு ஒரு பேச்சு, நாளுக்கு ஒரு செய்கை என்று கிட்டத்தட்ட பச்சோந்தி போலவே நிறம் மாறி கொண்டே இருக்கின்றனர். காயத்ரி, ஜூலி, சமயம் கிடைக்கும் போதெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் சினேகன், கணேஷ், சக்தி என அனைவருமே, ஒருவர் இருக்கும்போது ஒரு பேச்சும், அதே நபர் இல்லாமல் இருக்கும்போது இ

ரெண்டாவது சான்ஸ் யாருக்கும் கிடையாது! ஓவியாவின் அதிரடி முடிவு

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றை எபிசோடில் ஓவியா-ஆரவ் காதல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது...

'விவேகம்' படத்தின் விறுவிறுப்பான டிராக்லிஸ்ட் இதுதான்

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் பாடல்கள் முன்னோட்ட வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்த்தோம்...

'இனியொரு சிலை செய்வோம்'! சிவாஜிக்காக கமல் பதிவு செய்த டுவீட்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் சில கருத்துக்களை ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் பகிர்ந்து கொள்கிறார்...