close
Choose your channels

மீண்டும் ஒரு எலிமினேஷன் லிஸ்ட்: பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய பிக்பாஸ் புரமோ வீடியோவில் இரு அணிகள் தங்கள் பலத்தை கயிறு இழுக்கும் போட்டியில் நிரூபிப்பது போல் உள்ளது. ஒருபக்கம் சினேகன், கணேஷ், வையாபுரி, ரைசா மற்றும் பிந்துமாதவி. இன்னொரு பக்கம் ஆரவ், ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி. வழக்கம் போல் இந்த டாஸ்க்கிலும் ஓவியாவை காணவில்லை. இதில் சினேகன் அணி வெற்றி பெறுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் ஓவியா, ஜூலி, வையாபுரி ஆகியோர் இருக்கும் நிலையில் தற்போது கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற அணியிடம் தோல்வி அடைந்த அணியில் இருந்து மேலும் ஒருவரை எலிமினேட் செய்ய பிக்பாஸ் கருத்து கேட்கிறார். ஜூலி ஏற்கனவே எலிமினேஷன் லிஸ்ட்டில் இருப்பதால் சக்தி, காயத்ரி மற்றும் ஆரவ் இவர்கள் மூவரில் ஒருவரை வெளியேற்ற வேண்டுமானால் யாரை வெளியேற்றுவது என்று பிக்பாஸ் தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கிறார்.

இதில் பிந்துமாதவி சக்தியையும், ரைசா ஆரவ்வையும், கணேஷ் சக்தியையும் கூறுகின்றனர். மொத்தமாக மூன்று பேர்களையும் அனுப்பினால் நல்லது என்று வையாபுரி கூறுகிறார். ஏற்கனவே மூன்று பேர் எலிமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்களில் ஒருவரும் புதியதாக ஒருவரும் வெளியே அனுப்பபடுவாரா? அப்படியானால் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்படுவார்களா? என்பது குறித்த விபரங்கள் இன்றைய நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தால் தான் தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.