காங்கிரஸ் எம்.எல்.ஏ, காஸ்ட்யூம் டிசைனர் கணவர் மாரடைப்பால் மரணம்!

  • IndiaGlitz, [Wednesday,January 04 2023]

காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் கணவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

மறைந்த திருமகன் ஈவெராவுக்கு பூர்ணிமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். பூர்ணிமா பிரபலமான காஸ்டியூம் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமகன் ஈவெரா மறைவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குபவர் இந்த இயக்குனரா? படப்பிடிப்பு எப்போது?

நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு ’பொன்னியின் செல்வன்’ ‘விருமன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகி மூன்று மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கும் படங்களில் உள்ள ஆச்சரியமான ஒற்றுமை!

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் தனுஷ் கடந்த 2017-ம் ஆண்டு 'பா பாண்டி' என்ற படத்தை இயக்கினார் என்பது இந்த படம்

ரஜினியை அடுத்து விநியோகிஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்த மாஸ் நடிகர்: எத்தனை கோடி தெரியுமா?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'பாபா' 'லிங்கா' உள்பட ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்ததாக தகவல் வெளியானது. அந்த வகையில் தற்போது ரஜினிக்கு

'வாரிசு' படத்தில் விஜய் கேரக்டர் இதுதான்.. ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

உலகிலேயே முதல் முயற்சி.. திரைப்படமாக மாற்றப்பட்ட தமிழ் வெப்சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான வெப்சீரிஸ் உலகிலேயே முதல்முறையாக திரைப்படமாக மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன