திருச்சி டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம்… முதல்வர் அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

 

திருச்சியில் உள்ள டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்த அவர் ராஜகோபுரம் முன்பாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

அப்போது தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். மேலும் மாவட்டத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு திருச்சி டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முக்கொம்பு கதவணை திட்டப்பணிகள் 3 மாத காலத்திற்குள் செயல்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்க வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

More News

மகனின் நடத்தைமீது கடுப்பாகிய தந்தை… நிலத்தை செல்லநாய்க்கு எழுதி வைத்த விசித்திரம்!!!

மத்தியப் பிரதேசத்தில் விவாசாயி ஒருவர் தன்னுடைய செல்ல நாய்க்கு 2 ஏக்கர் நிலத்தை சொந்தமாக எழுதி வைத்து இருக்கிறார்.

இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவி… மீண்டும் ஒரு அசத்தல் தகவல்!!!

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பல அசத்தலான செயல்கள் நடந்தேறி இருக்கின்றன.

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்ன ஆச்சு?

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் நீடிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உதவி செய்த நடிகரின் பெயரை பிறந்த குழந்தைக்கு வைத்த தாய்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த உதவி குறித்து அனைவரும் அறிந்ததே.  அவர் செய்த உதவியால் ஏராளமான பொதுமக்கள் அவரை கடவுள் போல்

'ஈஸ்வரன்' ரிலீசுக்கு பிரச்சனையா? தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிம்பு நடித்த 'AAA' படம் குறித்த பிரச்சனை தற்போது எழுந்துள்ளதாகவும்