close
Choose your channels

பெயரை மாற்றுகிறதா ஃபேஸ்புக்… இணையத்தில் உலாவும் தகவல்!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சோஷியல் மீடியா நிறுவனங்களில் மிகவும் முன்னோடியாக விளங்கக்கூடிய ஃபேஸ்புக் தனது பெயரை மாற்றிக்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை வரும் அக்டோபர் 28 ஆம் தேதி அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உலகம் முழுவதும் சமூகவலைத் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது ஃபேஸ்புக். அதற்குப் பின்னர்தான் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற செயலிகள் இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமடைந்தன. வாட்ஸ்அப் வராத காலக்கட்டத்தில் இந்த ஃபேஸ்புக்தான் பலரின் விவாத மேடைகளாக விளங்கியது. மேலும் பலரது திறமைகளுக்கும் இதுதான் தீனி போட்டது.

அந்த அளவிற்கு இந்திய மக்களிடையே பிரபலமடைந்த ஃபேஸ்புக்கின்  பெயரை அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தற்போது மாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் ஃபேஸ்புக் நிறுவனத்தின்கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலி நிறுவனங்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஃபேஸ்புக் செயலியின் பெயரை மாற்றிவிட்டு இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஒகலஸ், பெயர் மாற்றம் செய்யப்படும் ஃபேஸ்புக் ஆகிய அனைத்தும் ஒரே செயலியின் கீழ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்படி அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்படுவதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் வரும் 28 ஆம் தேதி வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில் தகவல் வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் சேவை தொடர்பான பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் பெயரை மாற்றுவது பாதகமாக அமையலாம் எனப் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் பெயர்மாற்றம் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.