இப்படியும் ஒரு முதலாளி? கொரோனா நேரத்தில் டாடா வெளியிட்ட நெகிழ்ச்சி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இந்தப் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக தற்போது சினிமா பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றன.
அந்த வகையில் டாடா நிறுவனம் கொரோனா நிவாரணமாக ரூ.5 கோடி நன்கொடை வழங்கியது. அதோடு டாடா அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் அளவிலான உதவிகளையும் அந்நிறுவனம் செய்து வருகிறது. மேலும் டாடா நிறுவனத்தில் பணிபுரியும் உழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் மருத்துவத்திற்கும் இந்நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது.
இவை எல்லாவற்றையும் விட டாடா நிறுவனத்தின் சிஇஓ திரு.ரத்தன் டாடா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது முன்னாள் ஊழியர் ஒருவரை பூனேவில் நேரடியாகச் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் செய்தி இந்தியா முழுவதும் பிரம்மிப்பாகப் பார்க்கப்பட்டது.
இப்படி தனது ஊழியர்களுடன் எப்போதும் நெருக்கம் காட்டி வரும் டாடா உருக்காலை நிறுவனம் தற்போது மேலும் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரேனும் இறந்து விட்டால் அவர்களின் ஓய்வு ஊதிய காலமான 60 வயது வரையிலும் தொடர்ந்து அவர்களது குடும்பத்திற்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் அந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு முதல் பட்டப்படிப்பு வரையிலும் கல்விச் செலவையும் டாடா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
அதோடு கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்குவதற்கான இட வசதியையும் நிறுவனமே கவனித்துக் கொள்ளும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா நிறுவன ஊழியர்கள் அனைவரும் தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments