அஜித் பட வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை: நடிகை டாப்சி

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அஜித் பேசும் வசனங்களில் ஒன்றான 'நோ மீன்ஸ் நோ' என்ற வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ஒரிஜினல் படமான 'பிங்க்' படத்தில் நடித்த நடிகை டாப்சி, 'நோ மீன்ஸ் நோ' என்ற வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சினிமா நடிகை ஆவதற்கு முன் நான் தோழிகளுடன் டெல்லி சாலைகளில் நடந்து செல்வேன், மால்களுக்கு செல்வோம். நல்ல ரெஸ்டாரன்ட்களை தேடி உணவு உண்போம். ஆனால், இப்போது அது எதுவுமே முடியவில்லை. ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை நான் ஏற்றுக்கொண்டாலும் அந்த அன்பு சில சமயம் எல்லை மீறிவிடுகிறது. குறிப்பாக வெளியிடங்களில் அவர்கள் காட்டும் அன்பு எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்தார்களுக்கும் சிக்கலாகி விடுகிறது.

சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. 'நோ மீன்ஸ் நோ என்பது ரசிகர்களுக்கு இன்னும் புரியவில்லை. இதனால், நான் உடைகளை கூட, வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன். நான் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள். எனது குடும்பத்தில் முதன்முறையாக, நான் தான் பிரபலமாகி இருக்கிறேன். அதனால் நட்சத்திர அந்தஸ்து பற்றி என் குடும்பத்தினருக்கு புரியவில்லை. அதை புரிய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று டாப்சி கூறியுள்ளார்.

More News

மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால்.. கமல்ஹாசன் எச்சரிக்கை

ஒரே நாடு ஒரே மொழி என்ற கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இந்தியா முழுவதிலும் இந்தியை பரப்ப வேண்டும் என்று கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா? வைரமுத்து கேள்வி

சூரியனால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு ஒரே நேரத்தில் பகலை கொடுக்க முடியாதபோது இந்தியால் மட்டும் எப்படி ஒரே இந்தியாவிற்கு ஒரே மொழியாக இருக்க முடியும் என்ற கேள்வியை கவியரசு வைரமுத்து எழுப்பியுள்ளார்.

தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்து: மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஜாதி பாகுபாடு குறித்து பேசிய நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கவின் - லாஸ்லியா காதலை விட சுபஸ்ரீ மரணம் முக்கியம்: தமிழ் நடிகர் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதல் குறித்தே பலர் விவாதம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி, அதில் நடப்பவற்றை பேசுவதைவிட, சுபஸ்ரீ என்ற உயிர் பேனரால் இழக்கப்பட்டுள்ளது

இந்தி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்: வலியுறுத்தும் தமிழ் நடிகை

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஒரே நாடு ஒரே மொழி' என இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஒரு கருத்தை கூறினார்.