விஜய் பெயரை கேட்டதும் அதிர்ந்த அரங்கம்: கமல் ரியாக்சன் பாருங்க!

நேற்று நடைபெற்ற கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது விஜய் குறித்து பேசியதும் அரங்கமே அதிர்ந்த நிலையில் கமல்ஹாசனின் ரியாக்சன் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது விஜய் குறித்து பேச ஆரம்பித்தார். அப்போதுஅரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இந்த கரகோஷம் நிற்பதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகின. உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தினரை அமைதியாக இருக்கச் சொன்ன போதிலும் அரங்கம் அதிரும் அளவுக்கு தொடர்ந்து கரகோஷம் இருந்துகொண்டே இருந்தது. இதனை அடுத்து கமல் கூட்டத்தினரை அமைதியாக இருக்க சொன்னதை அடுத்தே கூட்டம் சில நிமிடங்கள் கழித்து அமைதியானது.

தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மாஸ் இதிலிருந்து தெரிய வருகிறது என ரசிகர்கள் கூறி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

More News

'நெஞ்சுக்கு நீதி' படம் பார்த்த தமிழக முதல்வர்: என்ன சொன்னார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள

வாரிசு நடிகர்கள் அவித்த முட்டை போல் இருக்கின்றார்கள்: பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!

பாலிவுட் நடிகைகளின் வாரிசுகள் அவித்த முட்டை போல் இருக்கிறார்கள் என்று பிரபல நடிகை ஒருவரின் சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சமந்தாவின் 4 மொழி படம்: டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 

பதட்டப்படாம இருந்தா 12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்: நயன்தாராவின் 'O2' டீசர்

பதட்டப்படாமல் அமைதியாக இருந்தால் 12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம் என்று நயன்தாரா பேசும் வசனத்துடன் முடியும் 'O2' படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'விக்ரம்' ஆடியோ விழாவில் கமலிடம் முக்கிய கோரிக்கை வைத்த உதயநிதி!

நேற்று உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனிடம் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.