close
Choose your channels

சினேகன் மனைவியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு உண்மையை சொன்ன கன்னிகா!

Thursday, March 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் பாடல் ஆசிரியருமான சினேகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில் கன்னிகாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்த உண்மையை கன்னிகா கூறி உள்ளார் .

நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்ற சினேகன், இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சினேகன் வெளியேறினார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகனின் மனைவி நடிகை கன்னிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கன்னிகாவின் கொள்ளை அழகிற்கு முக்கிய காரணம் அவரது நீண்ட தலைமுடி தான். ஆனால் இந்த புகைப்படத்தில் அவர் தலைமுடியை வெட்டி டாம்பாய் போன்ற தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘உங்களுடைய நீளமான தலைமுடி என்ன ஆச்சு? அது தான் உங்களுக்கு அழகு’ என்று கூறியுள்ளார். இதற்கு கேப்ஷனில்பதிலளித்துள்ள கன்னிகா, இது தனது ஒரிஜினல் ஹேர்ஸ்டைல் அல்ல’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து தனது தலை முடியை வெட்ட வில்லை என்பது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment