பிப்ரவரி 14 ல் வெளியாகும் திரைப்படங்கள் ஒரு பார்வை

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ் திரையுலகில் தயாராகும் திரைப்படங்கள் மூன்று முதல் ஐந்து படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் ஜீவா நடித்த சீறு மற்றும் மணிரத்னம் தயாரித்த ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அடுத்த வாரம் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி மூன்று படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்த படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப்ஹாப் தமிழாவின் நான் சிரித்தால்: ஏற்கனவே ஹிப்ஹாப் தமிழா நடித்த ’மீசையை முறுக்கு’ மற்றும் ’நட்பே துணை’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றதையடுத்து அவருடைய அடுத்த படமான ’நான் சிரித்தால்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

அமலாபாலின் அதோ அந்த பறவை: அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் முக்கிய வேடத்தில் நடித்த ’அதோ அந்த பறவை’ என்ற திரைப்படமும் பிப்ரவரி 14ல் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமலாபால் ரிஸ்க் எடுத்து டூப் இன்றி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் விறுவிறுப்பாக கதை நிச்சயம் த்ரில் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரில் இருந்து தெரிய வந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம்: சந்தானம் நடித்த ’டகால்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ’சர்வர் சுந்தரம் ’வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் செய்து ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது வரும் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகேஷ் பேரன் சந்தானத்துடன் நடித்திருக்கும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒ மை கடவுளே: அசோக்செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன் மற்றும் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பிற்குரிய ஒரி திரைப்படம் ஆகும்.

More News

மீண்டும் இணையும் பாகுபலி கூட்டணி: ஒரு ஆச்சரிய தகவல் 

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய 2 திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்தது

சென்னை ஸ்டார் ஹோட்டலில் விற்பனை செய்ய முயன்ற புரோக்கர்கள்: அதிர்ச்சி தகவல் 

சென்னையில் உள்ள முக்கிய ஸ்டார் ஓட்டல் ஒன்றை மூன்று புரோக்கர்கள் கேரள தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வீட்டுக்குழாயில் வந்த மது: சினிமா காமெடி உண்மையானதால் பரபரப்பு!

கலகலப்பு என்ற திரைப்படத்தில் சந்தானம் தேர்தலில் போட்டியிடும் ஒரு காட்சியில் வாக்காளர்களுக்கு குழாயில் மதுவை சப்ளை செய்வார். திரைப்படத்தில் வந்த இந்த காமெடி காட்சி கேரளாவில்

பனிப்போர் - அதிபர் ட்ரம்ப்பின் உரை நகலைக் கிழித்த சபாநாயகர் நான்சி

கடந்த 2018 இல் அமெரிக்க அதிபர் டரம்ப்க்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் முக்கிய காரணமாக இருந்தவர் அந்நாட்டு சபாநயாகர் நான்சி பெலோசி

பிறந்த 30 மணி நேரத்தில் குழந்தையை தாக்கிய கொரோனா: சீனாவில் பரபரப்பு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவைரஸ் பயங்கரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கிவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.