முடியலைன்னா வீட்டுக்கு போ! பிக்பாஸ் ஓனர் போல் அடாவடி செய்யும் வனிதா!

பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியலைன்னா வீட்டுக்கு போ என மீரா மிதுனை வனிதா பேசியது கொஞ்சம் ஓவராகவே இருப்பதாகவே பார்வையாளர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் போட்டியாளர்களும் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா இருக்கின்றார் என்றதுமே இவரால்தான் அந்த வீட்டில் பிரச்சனை வரும் என முதல் நாளிலேயே பார்வையாளர்கள் கணித்துவிட்டனர். அதற்கேற்ப சொர்ணாக்கா போல் செயல்பட்டு கொண்டிருக்கும் வனிதாவுக்கு கேப்டன் பதவியும் கிடைத்ததால் தலைகால் புரியாமல் ஆடி வருகின்றார்.

மீராமிதுனுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு வனிதாவின் ஆதரவை கேட்ட அபிராமியே தற்போது வனிதாவின் செயல் தவறு என்று கூற முற்பட்டாலும் யாரையும் வனிதா பேச விடுவதில்லை. தான் சொல்வதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்று அதிகாரம் செய்து வருகிறார்.

நேற்றைய நிகழ்ச்சியில் 'என்னுடைய அப்பா அம்மா கூட இப்படி என்னை பேசியதில்லை' என்று மீராமிதுன் கூறியபோது, 'அப்படியென்றால் உங்க அம்மா வீட்டுக்கு போ' என வனிதா கூறியது அகந்தையின் உச்சக்கட்டமாக பார்க்கப்படுகிறது. கேப்டன் என்றால் ஏதோ முதலமைச்சர் பதவிபோல் வனிதா நினைத்து கொண்டிருப்பதாகவும், மக்கள் நினைத்தால் ஒரே வாரத்தில் வெளியேறும் வாய்ப்பு இருப்பது தெரிந்தும் இவ்வளவு அகந்தை ஏன்? என்றும் பார்வையாளர்களின் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பிக்பாஸ் ஓனர் போல் செயல்பட்டு கொண்டிருக்கும் வனிதாவுக்கு ஆப்பு வைக்கப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

சித்தார்த்தை அடுத்து ஹாலிவுட் படத்தில் அரவிந்தசாமி

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் சிம்பா என்ற சிங்கத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஹூக் மாட்டிவிட வேற ஆளே கிடைக்கலையா மீரா? நெட்டிசன்கள் கலாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் கடந்த ஒரு வாரமாக பார்த்ததில் வனிதா மற்றும் மீராமிதுன் ஆகிய இருவருமே பிரச்சனைக்குரியவர்களாக தென்படுகின்றனர்.

5ஆம் தேதி திருமணம், 9ஆம் தேதி வரை ஜெயில்: மது ஒழிப்பு போராளி நந்தினியின் நிலை

மது ஒழிப்புக்காக மாணவர் பருவம் முதல் போராட்டம் செய்து வரும் நந்தினிக்கு வரும் ஜூலை 5ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில்

இனிமேல் கியூப் கட்டணம் இல்லை: பாரதிராஜாவின் முக்கிய அறிவிப்பு!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்ததும், தனி அதிகாரிக்கு ஆலோசனை வழங்க பாரதிராஜா உள்பட ஏழு பேர்களை ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ததும் தெரிந்ததே

தனுஷ் பட நாயகியின் அரைநிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரல்!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'அனேகன்' படம் உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை அம்ரியா தஸ்தூர்.