close
Choose your channels

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்: நிர்மலா சீதாராமன்

Thursday, May 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாடியபோது ரூ.20 லட்சம் கோடிக்கான நலத்திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதன் தொடர்ச்சியாக இன்றும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளின் சாரம்சம் இதோ:

கிசான் கிரெடிட் கார்டுக்கு ரூ.2 லட்சம் கோடி. கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்துவதன் மூலம் 2.50 கோடி விவசாயிகள் பலன்பெறுவார்கள்

பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவதற்காக ரூ.6,000 கோடிக்கான திட்டம்

மலிவு விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு. நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான மலிவுவிலை வீடு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இதனால் 2.5 லட்சம் குடும்பத்தினர் பலன் அடைவார்கள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் அறிவிக்கப்படுகின்றன

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு’

குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ரேசன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்படும்

தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டம் (ESI) நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது

12 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 கோடி முகக் கவசங்கள், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன'

100 நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக மே 13ம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.10,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது

தன்னிறைவு திட்டத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கான திட்டமொன்று அறிவிக்கப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 ஆம் தேதி வரை தள்ளுபடி

பழங்குடிகள் பயன்பெறும் வகையில் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு

முத்ரா திட்டத்தில் ரூ.50000க்கு குறைவாக கடன் பெற்றவர்களுக்கு 2% வட்டி தள்ளுபடி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும்

10 பேருக்கு குறைவாக பணிபுரியும் நிறுவனங்களில் விருப்ப அடிப்படையில் ஈ.எஸ்.ஐ திட்டம்

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாம் கட்ட சிறப்பு திட்டங்களை அறிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.