அஜித் படத்தை இயக்குகிறாரா 'எப்.ஐ.ஆர்' மனு ஆனந்த்? அவரே அளித்த பதில்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனு ஆனந்த், அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் கௌதம் மேனன் அவர்களின் உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறினார். இந்த படத்தின் போது தனக்கு மிகப்பெரிய அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பாக அஜித் தனக்கு கூறிய அறிவுரைகள் தனக்கு வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினார்

அப்போது அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை எப்போது பெறுவீர்கள் என்று கேட்டதற்கு இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை, ஆனால் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவனாக கருதப்படுவேன் என்று கூறினார்

மேலும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தில் ஒரு கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என எனது குருநாதர் கவுதம் மேனனிடம் கூறி, இது குறித்து எப்போது பேச வரலாம் என நான் அனுமதி கேட்டேன். அதற்கு அவர், ‘எப்போது படப்பிடிப்பு என்று மட்டும் கூறுங்கள்’ என்று கூறியது அவர் என்மேல் வைத்திருந்த நம்பிக்கையை காட்டியுள்ளது’ என்றும் தெரிவித்தார்.

More News

தயவுசெய்து இந்த படத்தை பாருங்கள்: விஜய்சேதுபதி படம் குறித்து சீமான்!

தயவு செய்து இந்த படத்தை அனைவரும் பாருங்கள் என விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார்.

நெகிழ வைக்கும் நடிகர் சோனு சூட்டின் மனிதநேயம்… வைரலாகும் வீடியோ!

தென்னிந்திய மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து

நீஜத்தில் ஹீரோவாக வேண்டுமா? ரசிகர்களுக்கு நடிகை ஆண்ட்ரியா வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் மற்றும் பாடகியாகவும் வலம்வரும் ஆண்ட்ரியா ஜெர்மையா தற்போது சோஷியல்

வெள்ளெலிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்!

ஹாங்காங்கில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை கொரோனா

தமிழ் வெப் சீரிஸில் நடிகர் சரத்குமார்… வெளியீட்டு தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் “இறை” எனும் தமிழ் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின்