13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு கிடைத்த சோகம்!

13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. இடையில் 2 ஆண்டுகள் சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்டாலும் 11 ஆண்டுகள் விளையாடிய சென்னை அணி இதுவரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது இல்லை

இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்றுடன் 11 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்தவுடன் வெளியான புள்ளி பட்டியலில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் 2 தோல்வி அடைந்த சென்னை அணி 2 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது

கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று வெற்றி பெற்றதன் மூலம் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்றைய தோல்வியால் முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல் அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போதுள்ள புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான், மூன்றாவது இடத்தில் பெங்களூர், நான்காவது இடத்தில் பஞ்சாப், ஐந்தாவது இடத்தில் மும்பை மற்றும் ஏழாவது இடத்தில் கொல்கத்தா அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

முதல் நான்கு இடத்திற்குள் மட்டுமே சிஎஸ்கே அணியை பார்த்த ரசிகர்கள் தற்போது கடைசி இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இனி வரும் போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் விருப்பமாக உள்ளது

More News

அசத்தலான யார்க்கர்கள்: தமிழக பந்துவீச்சாளர் நடராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

கொரானாவால் பாதிக்கப்பட்டும் பாட்டு பாடி உற்சாகமாக இருக்கும் 'விஸ்வாசம்' புகழ் பாடகர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்ற பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்றா மாற்றுத்திறனாளி பாடகர் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலை தத்ரூபமாக

அனைவரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 28 ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்படும்

தொட்டாலே ஷாக்… வானத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் விழுந்த கல்லால் பரபரப்பு!!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த தீர்த்தாண்டதானம் எனும் இடத்தில் நேற்றுமுன் தினம் பயங்கர சத்தத்துடன் ஒரு கல் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

ஏழைகளின் நாயகன் நடிகர் சோனு சூட்டுக்கு சிறப்பு விருது வழங்க இருக்கும் ஐ.நா.!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்