close
Choose your channels

முதல்முறையாக ரக்சிதா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய தினேஷ்... என்ன சொன்னார்?

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான தினேஷ் முதல்முறையாக தனது மனைவி ரக்சிதா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்று 75 நாள் நிறைவு பெற்றதை அடுத்து பலரும் தங்களது சக போட்டியாளர்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர். பூர்ணிமா கூறிய போது ’விஷ்ணு எனது நல்ல நண்பர் தான், ஆனால் அவ்வப்போது எனக்கு ஆப்பு வைப்பார். ஆனால் அவர் அழுத போது அவர் மீது உள்ள கொஞ்சநஞ்ச கோபமும் எனக்கு போய்விட்டது என்று கூறுகிறார்

இதனை அடுத்து பேச வந்த தினேஷ், ‘போன சீசன் அதாவது பிக்பாஸ் ஆறாவது சீசன் எனக்கு மிகவும் கனெக்ட் ஆன ஒரு சீசன், அதில் சின்ன ஒரு எமோஷனல் இருக்குது, அதைப்பற்றி நான் பேசினால் நான் டோட்டலாக ட்ரெயின் அவுட் ஆகி விடுவேன், எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடந்து விட்டது, இந்த பிபி 7 சீசன் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்

கடந்த சீசனில் தினேஷின் மனைவி ரக்சிதா போட்டியாளராக இருந்த நிலையில் தனது மனைவி குறித்து தான் அவர் மறைமுகமாக கூறுவதாக நம்பப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.