இந்தியாவில் முதல்முதலாக கடல் தேவதை கேரக்டரில் நடிக்கும் தமிழ் நடிகை: யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,January 07 2022]

கடல் தேவதை குறித்த பல திரைப்படங்கள் ஹாலிவுட்வில் வெளியாகி இருந்தாலும் முதல் முறையாக கடல் தேவதை கேரக்டரில் தமிழ் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

’துப்பாக்கி முனை’ என்ற திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு ஃபேண்டசி திரைப்படம் என்றும் இந்த படத்தில் கடல் தேவதை கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்க வைப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக கடல் தேவதை குறித்த கதையம்சம் கொண்ட திரைப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கடல் தேவதை கேரக்டருக்கு ஆண்ட்ரியா மிகப்பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த படத்தில் சுனைனா, பிந்துமதி, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக 60 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ஏராளமான அனிமேஷன் பணிகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

More News

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு இரண்டு வேடமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது

மழையை ரசிக்கும் நயன்தாரா: விக்னேஷ் சிவன் வெளியிட்ட க்யூட் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மழையை ரசிக்கும் வீடியோவை அவரது காதலர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

'வலிமை' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய பணி முடிந்தது: ரிலீஸ் எப்போது?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று