close
Choose your channels

பாலிவுட் பிரபலத்துடன் முதல்முறையாக இணையும் மாதவன்.. இயக்குனர் யார் தெரியுமா?

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகருடன் இணைந்து நடிகர் மாதவன் முதல் முறையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன் நடிப்பில் உருவான ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம், நயன்தாராவுடன் ’தி டெஸ்ட்’ மற்றும் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படம் என மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் அவருடன் இணைந்து மாதவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சூப்பர் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் மும்பை, லண்டன் உள்பட பல பகுதிகளில் இந்த படத்தை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக மாதவன் மற்றும் அஜய் தேவ்கான் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை பாலிவுட் பிரபல இயக்குனர் விகாஸ் என்பவர் இயக்க உள்ளார். இவர் கங்கனா ரனாவத் நடித்த ’குயின்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment