close
Choose your channels

முதல்முறையாக அஜர்பைஜான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு: எந்த ஹீரோ படம் தெரியுமா?

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் முதல்முறையாக அஜர்பைஜான் பாராளுமன்றத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த காட்சிக்காக மட்டும் 4 கோடி ரூபாய் படக்குழுவினர் செலவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’சர்தார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மாறுபட்ட இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தின் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை அஜர்பைஜான் நாடாளுமன்றத்தின் முன் படமாக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிறப்பு அனுமதி பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அஜர்பைஜான் பாராளுமன்ற காட்சிகளின் படப்பிடிப்புக்கு மட்டும் 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெறும் அதே நேரத்தில் சென்னையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment