ஊரடங்கு உத்தரவிற்கு பின்னரும் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 25 2020]

உலகமெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் சுமார் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி விட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு

இருப்பினும் அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்படாமல் ஒரு சிலர் வெளியே வந்து கொரோனா வைரசை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பயனில்லாமல் போய் வருகிறது. ஒருசிலர் ஊரடங்கு உத்தரவை மீறினாலும் இந்த உத்தரவு பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடு முழுவதற்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய தலைநகர் டெல்லியில் மக்கள் வீதியில் நடனமாடி வருவதாகவும் இதனால் அங்கு கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. சற்றுமுன் வெளிவந்த தகவலின் படி டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே டெல்லியில் கொரோனா வைரசால் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள டெல்லி மக்கள், அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

More News

வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றுங்கள்: பிரபல நடிகை வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும் நேற்று நடிகை வரலட்சுமி ஒரு வீடியோ பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

கொரோனாவில் இருந்து தப்பிக்க எஸ்வி சேகர் கூறிய ஐடியா

கொரோனா வைரஸ் உலகில் உள்ள மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் உலக நாடுகளின் அரசுகள் திணறி வருகின்றன

போலீசாருக்கே வாளை காட்டி எச்சரித்த பெண் சாமியார்: போலீஸ் எடுத்த நடவடிக்கை

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைப்பது ஒன்றுதான்.

கொரோனா; தேசியம், இனம் என்றெல்லாம் பார்க்காது!!! மோதல்களைக் கைவிடுங்கள்!!! ஐ.நா. வலியுறுத்தல்!!!

“நம் உலகம் கொரோனா என்ற பொது எதிரியை எதிர்க்கொண்டு வருகிறது. அது தேசியம், இனம், நிறம் போன்ற வேறுபாடுகளையெல்லாம் பார்க்காது.

தமிழ்நாடு முழுவதிலும் டீக்கடைகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும்