மனைவியை கொலை செய்து கொரோனா மீது பழிபோட்ட கணவன்

மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனா மீது பழி போட்ட கணவர் ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்த டேவிட் அந்தோணி கடந்த மார்ச் மாதம் தனது மனைவி கிரெட்சனுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மனைவியின் உறவினர் உள்பட அனைவரையும் நம்ப வைத்தார்.

இருப்பினும் மனைவியின் உறவினர்களுக்கு சந்தேகம் வர, இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து டேவிட் கூறிய மருத்துவமனையில் சென்று விசாரித்தபோது டேவிட் மனைவி அங்கு அட்மிட் ஆகவில்லை என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து டேவிட் அந்தோணி வீட்டை போலீசார் தீவிரமாக சோதனை செய்ததில் ரத்தக்கறை படிந்த துணி ஒன்றை கண்டுபிடித்தனர். மேலும் படுக்கையறையில் சில உறைந்த ரத்தமும் இருந்தது. அதன்பின் டேவிட்டை போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்தபோது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலையில் இருந்து தப்பிக்க கொரோனாவால் தனது மனைவி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அனைவரையும் நம்ப வைத்ததையும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனா மீது பழிபோட்ட கணவரின் செயலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விஷால் செய்த உதவி!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

கொரோனாவால் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவர் பலி:

தமிழகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதும் அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேர் கொரோனா வைரசால் பலியாகி வருவதுமான செய்திகளை தினந்தோறும்

கொரோனாவால் இயற்கைக்கு ஏற்பட்ட மாற்றம்: நாசாவின் ஆச்சரிய புகைப்படம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி, லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில் இந்த வைரஸ் மனித இனத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆன்லைனில் பாடம் நடத்திய போது திடீரென வந்த ஆபாச வீடியோ: ஹேக்கர்கள் கைவரிசையா?

இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலிருந்து பணி செய்வது மற்றும் ஆன்லைன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது

பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை