திருநங்கையாக மாறிய WWE சூப்பர் ஸ்டார்!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

முன்னாள் WWE சூப்பர் ஸ்டார் Gabbi Tuft திருநங்கையாக மாறி உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

WWE சூப்பர் ஸ்டார் Gabbi Tuft என்பவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவர் தற்போது திருநங்கையாக மாறி உள்ளதாகவும் இதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் தனது சமூக ஊடகத்தில் நீண்ட விளக்கம் அளித்தபோது ’கடந்த எட்டு மாதங்கள் எனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது. ஒரு திருநங்கை உலகில் எதிர்கொள்ளவேண்டிய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்து கொண்டேன். இருப்பினும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதை கவனிப்பதை நான் நிறுத்திய நாள் தான் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.

எனது அன்பான மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் என்னை நன்றாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு எனது நன்றி. நான் என்றென்றும் அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது
 

More News

அடுத்தடுத்து அதிர்ச்சி: மீண்டும் விபத்தில் சிக்கிய பிரபாஸ் படக்குழு!

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' நாயகன் பிரபாஸ் நடிப்பில் 'ஆதிபுருஷ்' என்ற படத்தின் படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே மிகப்பெரிய தீவிபத்து

சினிமாவில் நாயகியாகும் மற்றொரு விஜே!

தொலைக்காட்சிகளில் விஜே ஆக பணிபுரிந்து கொண்டிருக்கும் பலர் பெரிய திரையிலும் நடித்து வருகின்றனர் என்பதும் விஜய் டிவி புகழ் டிடி, ரம்யா, ஜாக்குலின் உள்பட பலர் திரையுலகில் நடித்து வருகின்றனர்

என் வாழ்க்கையில் ஒரு புது பயணம்: விஜய் டிவி ஜாக்குலின் போட்ட புதிர்!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய விஜய் டிவி ஜாக்லின் தற்போது தேன்மொழி என்ற தொலைக்காட்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் வாபஸ்… தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

“மறப்போம் மன்னிப்போம்” பாணியில் தமிழக அரசை எதிர்த்து போராட்டம் செய்த பள்ளி ஆசிரியர்களின் அனைத்து வழக்குகளையும் தமிழக முதல்வர் தள்ளுபடி செய்து அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

நடிகை சமந்தாவின் புது பார்ட்னர்: வைரல் வீடியோ!

நடிகை சமந்தாவின் லைஃப் பார்ட்னராக நடிகர் நாக சைதன்யா இருக்கும் நிலையில் தற்போது அவருடைய புது பார்ட்னர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.