close
Choose your channels

என் வாழ்க்கையில் ஒரு புது பயணம்: விஜய் டிவி ஜாக்குலின் போட்ட புதிர்!

Saturday, February 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய விஜய் டிவி ஜாக்லின் தற்போது தேன்மொழி என்ற தொலைக்காட்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு புதிய பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அந்த பயணத்திற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது, ‘நான் வாழ்க்கையில் இப்போது ஒரு புதிய பயணத்தை தொடங்கப் போகிறேன். இதுவரைக்கும் நீங்கள் என்னை உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொடுத்த ஆதரவுக்கு நன்றி. மேலும் இப்போது நான் தொடங்கப் போகும் புதிய விஷயத்துக்கும் இதே மாதிரி ஆதரவு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை மிகவும் குறுகியது எனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜாக்குலின் தொடங்கப் போகும் புதிய பயணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் பல நெட்டிசன்கள் அவர் அடுத்ததாக புதிய ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அல்லது திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வாய்ப்பிருப்பதாகவும் கமெண்ட் பகுதியில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஒரு சிலர் நெல்சன் இயக்கவுள்ள ’தளபதி 65’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க போவதாகவும் கூறி வருகின்றனர். ஏற்கனவே நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படத்தில் ஜாக்குலின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.