மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோக்கள்?

  • IndiaGlitz, [Thursday,August 31 2017]

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி தவிர மேலும் மூன்று ஹீரோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபு-கார்த்திக் நடித்த 'அக்னி நட்சத்திரம், மோகன் - கார்த்திக் நடித்த 'மெளனராகம், ரஜினி-மம்முட்டி நடித்த 'தளபதி', மோகன்லால்-பிரகாஷ்ராஜ், நடித்த 'இருவர், விக்ரம்-பிரத்விராஜ் நடித்த 'ராவணன்' என இரண்டு ஹீரோகள் படங்களையும், சுர்யா, மாதவன், சித்தார்த் என மூன்று ஹீரோக்கள் நடித்த 'ஆயுத எழுத்து' போன்ற படத்தையும் இயக்கிய மணிரத்னம் தற்போது முதன்முதலாக நான்கு ஹீரோக்கள் படத்தை இயக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு ஹீரோக்கள் தேர்வு பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஹீரோக்கள் என்றால் நான்கு ஹீரோயின்கள் உண்டா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

'பைரவா' பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் விக்ரம்

எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை', சிவாஜி கணேசன் நடித்த 'வாணி ராணி', ரஜினிகாந்த் நடித்த 'உழைப்பாளி', அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'பைரவா' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரடொக்சன்ஸ்...

'மெர்சல்' டீசர், டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் புதுப்புது செய்திகள் தினமும் வெளிவந்து சமூக இணையதளங்களை பரபரப்பாக்குவதுடன் டிரெண்டிங்கிலும் உள்ளது.

கோட்டையை நோக்கி நகரத் தொடங்கி விட்டோம்: கமல் அதிரடி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலமும் பேட்டிகள் மூலமும் தெரிவித்து வருகின்றார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் பட வில்லன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்களுக்குத்தான் புதியதே தவிர இந்த நிகழ்ச்சி இந்தியில் 10 பாகங்களாகவும், கன்னடத்தில் நான்கு பாகங்களாகவும் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது...

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' டிராக்லிஸ்ட் இதோ

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'விக்ரம் வேதா' சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான 'கருப்பன்' வெகுவிரைவில் வெளியாகவுள்ளது...