'தளபதி 69' படத்திற்காக 4 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை.. யார் நடித்தாலும் 10 கோடிக்கும் மேல் தான் சம்பளம்..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தை எச் வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் நாயகி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள வரும் நிலையில் அடுத்ததாக அவர் ’தளபதி 69’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படம் தான் அவருடைய கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் எச் வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக நடிக்க நான்கு பிரபல நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

பிரபல பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், மிருணாள் தாக்கூர் மற்றும் தென்னிந்திய நடிகைகளான த்ரிஷா மற்றும் சமந்தா ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நான்கு நடிகைகளுமே 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதால் இவர்களில் யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தளபதி விஜய்க்கு இந்த படத்திற்காக 250 கோடி சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அப்போது இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை யார் இந்த குறித்து தெரியவரும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.

More News

கேப்டன் மகனுக்கு கிடைத்த டபுள் சர்ப்ரைஸ்.. விஜயகாந்த் இருந்திருந்தால் கூட இப்படி நடந்திருக்குமா?

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு டபுள் சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது. விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால்

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ரிலீஸ் தகவல்.. அட்டகாசமான போஸ்டருடன் அறிவித்த லைகா..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் அடுத்த படம் எந்த மொழியில்? கசிந்த தகவல்..!

தல தோனி சமீபத்தில் தோனி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனத்தின் முதல் படமே ஒரு தமிழ் படம் என்பது தெரிந்தது. இந்நிலையில் அடுத்ததாக இந்நிறுவனத்தின்

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த நடிகை.. எமோஷனல் பதிவு..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் அம்மா ஷோபாவை சந்தித்ததாக எமோஷனலாக நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம்.. வைரல் புகைப்படங்கள்..!

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம் நடந்ததை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.