close
Choose your channels

'தளபதி 69' படத்திற்காக 4 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை.. யார் நடித்தாலும் 10 கோடிக்கும் மேல் தான் சம்பளம்..!

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தை எச் வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் நாயகி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள வரும் நிலையில் அடுத்ததாக அவர் ’தளபதி 69’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படம் தான் அவருடைய கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் எச் வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக நடிக்க நான்கு பிரபல நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

பிரபல பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், மிருணாள் தாக்கூர் மற்றும் தென்னிந்திய நடிகைகளான த்ரிஷா மற்றும் சமந்தா ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நான்கு நடிகைகளுமே 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதால் இவர்களில் யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தளபதி விஜய்க்கு இந்த படத்திற்காக 250 கோடி சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அப்போது இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை யார் இந்த குறித்து தெரியவரும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment