கருணாஸ் கார் கண்ணாடியை நொறுக்கிய மர்ம நபர்கள்: நெல்லையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் கார் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் நெற்கட்டும்செவல் என்ற கிராமத்தில் நடைபெறும். இந்த விழாவிற்கு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் இந்த வருடம் பூலித்தேவனின் 302வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், பூலித்தேவனின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக நெற்கட்டும்சேவலுக்கு சென்றிருந்தார். அங்கு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்னை திரும்பிய போது அவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென சூழ்ந்து கொண்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக லேசான தடியடி நடத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைத்து, கருணாஸை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News

இதுவே இந்தியாவின் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத அரியலூர் அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் துன்பக்கடலில் மூழ்கடித்த நிலையில் நேற்று இரவே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்...

இன்னும் எத்தனை உயிர் வேணும், வயிறு எரிகிறது. கஸ்தூரி ஆவேசம்

மத்திய அரசின் அதிகாரம், மாநில அரசின் கோழைத்தனம் காரணமாக நீட் விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது...

தமிழகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது: நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பை இழந்த அரியலூர் அனிதா, மனவேதனை காரணமாக உயிரையும் இழந்தார். அவருடைய கனவுகள் கலைந்தது. 1176 மதிப்பெண்கள் மண்ணோடு புதைந்துவிட்டது...

சென்னை மெரீனாவில் திடீர் கூடுதல் பாதுகாப்பு ஏன்?

நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழ்ந்த மாணவி அனிதாவின் மரணம் ஒவ்வொரு தமிழனையும் கொதிப்படைய செய்துள்ளது. மருத்துவர் என்ற கனவுகளுடன் வாழ்ந்த அந்த மாணவி செய்த தவறென்ன? இனிமேலும் இந்த கையாலாகாத அரசின் மீது கோபப்படாமல் இருந்தால் நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்....

அனிதா தற்கொலை: தலைவர்கள் இரங்கல்

12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்து கட் ஆப் 196.7 இருந்தும் அரியலூர் அனிதாவுக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட வேறு என்ன துரதிஷ்டம் இருக்க போகிறது...