இன்று முதல் 50 பேருக்கு மதிய உணவு வழங்க போகிறேன்.. விஜயகாந்த் நினைவிடத்தில் விஜய் டிவி பிரபலம் பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,January 05 2024]

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த விஜய் டிவி பிரபலம் இன்று முதல் எனது கேகே நகர் அலுவலகத்தில் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி பிரபலமான புகழ் தற்போது விஜய் டிவியில் உள்ள நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி திரையுலகிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் காலமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’கேப்டன் ஐயா அவர்களின் மறைவுக்கு ஏற்கனவே நான் அஞ்சலி செலுத்தினேன். இன்று நான் மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததற்கு என்ன காரணம் என்றால் பசி என்று வருபவர்களுக்கு சோறு போட்டு விஜயகாந்த் வழி அனுப்பி வைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் கூட சென்னைக்கு வந்த புதிதில் பக்கோடா, வாட்டர் பாட்டில் மட்டும் தான் மதிய உணவாக சாப்பிட்டு இருந்தேன். இந்த நிலையில் விஜயகாந்த் அவர்கள் ஆசியோடு இன்று முதல் என்னுடைய கேகே நகர் அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு வழங்க போகிறேன். 50 பேரில் இருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க போகிறேன். பசி என்று யார் வந்தாலும் அவர்களுடைய பசியை போக்க முடிவு செய்துள்ளேன். இது குறித்து இன்னும் விரிவாக ஒரு வீடியோவை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More News

'ஜெயிலர்', 'கேப்டன் மில்லர்' படங்களை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் சிவராஜ்குமார்..!

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். மேலும் அவர் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்திலும் முக்கிய

பிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென வந்த இருவர்.. யார் அவர்கள்.. களைகட்டும் வீடு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 95 நாள் முடிவடைந்து இன்று 96 வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு திடீரென இரண்டு பேர் வந்துள்ளது போட்டியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது: 'கேப்டன் மில்லர்' விழாவில் தனுஷ்..!

 தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், நடிகர் சிவராஜ்குமார், தனுஷ்,

'என்னை அசைவம் சாப்பிட வைத்தவர்': விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா..

கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் காலமான நிலையில் இன்று நடிகர் சூர்யா அவருடைய நினைவிடத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி தேம்பி தேம்பி அழுதார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் லைகாவின் 2 படங்கள்.. இன்னொரு படம் எது தெரியுமா?

வரும் பொங்கல் திருநாளில் 'அயலான்', 'கேப்டன் மில்லர்' 'மெர்ரி கிறிஸ்துமஸ்' மற்றும் ''மிஷின் சாப்டர் 1' ஆகிய 4 முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள