பிரேம்ஜி அமரன் திருமணம் எப்போது? கங்கை அமரனின் பிரத்யேக பேட்டி!

பிரபல இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பல அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்தவர் கங்கை அமரன் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது மகன் பிரேம்ஜி அமரன் திருமணம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். பிரேம்ஜிக்கு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் தற்போது தான் அவருடைய அம்மா இறந்து உள்ளதால் அந்த சோகம் முடிந்த பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் இதுவரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி தற்போது ஒப்புக் கொண்டு இருப்பதாகவும், அவருக்கேற்ற பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், சரியான பெண் அமைந்ததும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பிரேம்ஜி தனது அம்மா இல்லாததால் மிகுந்த சோகத்துடன் இருப்பதாகவும் வெளியில் அவர் சந்தோசமாக இருப்பது போல் இருந்தாலும் ஆழ்மனதில் அவருக்கு அம்மாவின் இழப்பு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

More News

குழந்தைகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்...!

குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதார சேவை இயக்குநகரம் வெளியிட்டுள்ளது.

400 ஆதிவாசி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி உதவிய பாகுபலி வில்லன் நடிகர்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதி “பாகுபலி” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்

அசத்தலாக பைக் ஓட்டும் ஆல்யா மானஸா: வைரல் வீடியோ

'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா என்பதும் பின்னர் அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆல்யாவுக்கு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிமுறைகளை நீட்டிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் அதிகாரிகள் பலரும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

அட்லியின் அடுத்த படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோ?

அட்லியின் அடுத்த படத்தில் தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.