என் சொத்துக்களை மிரட்டி வாங்கியவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதா? கங்கை அமரன் ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

பிரபல இசையமைப்பாளரும், பாஜக் கட்சியில் பணியாற்றி வருபவருமான கங்கை அமரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
'சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவதற்கு, உடந்தையாக இருந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதா? என்று ஆவேசமாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியாக வேண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் கங்கை அமரன் பேட்டியளித்திருந்தபோது, கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணை வீட்டை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தன்னிடமிருந்து மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி எழுதி வாங்கியதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனிக்கட்சி தொடங்க திட்டமா? ஓபிஎஸ் அதிரடி பதில்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெற்றுவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்...

திமுக ஆதரவை கோர மாட்டேன். ஓபிஎஸ்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து கொண்டு வருகிறார்...

2012க்கு பின் நான் சசிகலாவை பார்க்கவே இல்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில், இன்று காலை அவரது இல்லத்தில் பேட்டி அளித்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டியளித்துள்ளார்

'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் &

மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

நேற்றிரவு சென்னை மெரீனாவில் முதல்வர் ஓபிஎஸ் கலைத்த மெளனம் அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலாக உருவாகியுள்ளது.