தனுஷின் 'பா.பாண்டி 2' படத்தில் கவுண்டமணி?

  • IndiaGlitz, [Tuesday,February 11 2020]

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் கடந்த 2017ம் ஆண்டு ’பா.பாண்டி’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் மாறினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தனுஷ் ஒரு நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ’பா.பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் நடித்த இந்தப் படத்தின் அடுத்த பாகத்தில் கவுண்டமணி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ராஜ்கிரண் கேரக்டருடன் இந்த படத்தில் டிராவல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெடி நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் தனுஷின் இயக்கத்தில் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

டெல்லித் தேர்தல் முடிவு: ட்விட்டரில் அதிர வைத்த குஷ்பு

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் படு தோல்வியைத் தழுவியிருக்கிறது.

23 வயது பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: பெரும் பரபரப்பு

கொல்கத்தாவை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை சுபர்ணா ஜாஷ் என்பவர் கடந்த ஞாயிறு அன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூரரை போற்று: முதல்முறையாக நடுவானில் பாடல் வெளியீடு

சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் 5 அப்டேட்டுக்கள் அடுத்தத்து இன்றும் நாளையும் வெளிவர இருப்பதாக வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

'சூரரை போற்று' படத்தின் தொடர்ச்சியான ஐந்து அப்டேட்டுக்கள்: குஷியில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்

டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளார்கள்: பாஜக தோல்வி குறித்து பிரபல நடிகர்

டெல்லியில் கடந்த 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன.