விஜய்யுடன் முதன்முதலாக இணையும் கவுதம் கார்த்திக்

  • IndiaGlitz, [Sunday,April 10 2016]
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'தெறி' திரைப்படத்தின் ரிசர்வேஷன் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிக்கெட்டுக்கள் மின்னல் வேகத்தில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இடைவேளையில் கவுதம் கார்த்திக் நடித்த 'இந்திரஜித்' படத்தின் டீசர் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. விஜய் படத்துடன் முதன்முதலாக கவுதம் கார்த்திக் படத்தின் டீசர் இணைந்து வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'தெறி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, 'இந்திரஜித்' படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தெறி' படத்துடன் 'இந்திரஜித்' டீசர் வெளியாவதால் இந்த படத்திற்கு நல்ல புரமோஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைபிரபு இயக்கியுள்ள 'இந்திரஜித்' படத்தில் வுதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா பதோரியா, பிரதாப் போத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்

More News

விஜய் இயக்குனரின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. மேலும் அவர் தற்போது 'கடவுள் இருக்குறான் குமாரு', மற்றும் ....

விஜய்யின் அடுத்த நாள் விஜய்சேதுபதியின் நாள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள்....

சசிகுமாரின் 'வெற்றிவேல்' ரிலீஸ் தேதி

'தாரை தப்பட்டை' படத்தை அடுத்து சசிகுமார் நடித்து முடித்துள்ள 'வெற்றிவேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு ....

'தர்மதுரை' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நானும் ரவுடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களில் நடித்த விஜய்சேதுபதியின் நான்காவது வெற்றிப்படம் என எதிர்பார்க்கப்படும் படம் 'தர்மதுரை'.....

'இறைவி'யில் நடனம் ஆடும் பிரபல இசையமைப்பாளர்

பிரபல இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்களை அடுத்து இன்னொரு இசையமைப்பாளரான ....