close
Choose your channels

விஜய் இயக்குனரின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

Saturday, April 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. மேலும் அவர் தற்போது 'கடவுள் இருக்குறான் குமாரு', மற்றும் 'புரூஸ்லீ' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் மற்றொரு படத்தில் நடிக்க ஜி.வி.குமார் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த ஹிட் படமான 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய இயக்குனர் சசி இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முன்வந்துள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.