'இவன் தந்திரன்' ஓப்பனிங் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிலைமையை மிக அழகாக எடுத்து கூறியதால் கடந்த மூன்று நாட்களாக திரையரங்குகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.

இந்த படம் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் 18 திரையரங்குகளில் 156 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.45,95,340 வசூல் செய்தது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர்.

இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்த நிலையில் துரதிஷ்டவசமாக இன்று முதல் திரையரங்குகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்றுடன் வசூல் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்க வேலைநிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும் இந்த படம் திரையிடப்பட்டால் திருப்தியான வசூல் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது...

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்: இயக்குனர் ஷங்கர் கோரிக்கை

தமிழ் திரையுலகம் கடந்த சில வருடங்களாகத்தான் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தயாரிப்பாளர்கள் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து பெரிய பட்ஜெட் படங்களை துணிச்சலுடன் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்...

SIIMA விருது 2017: விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் பட்டியல்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா அபுதாபியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலக சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது...

SIIMA விருது 2017: மீண்டும் டபுள் விருது பெற்ற நயன்தாரா

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தேசிய விருதுக்கு அடுத்தபடியாக மதிப்புமிக்க விருதாக கருதப்படும் இந்த விருதுகளை திரையுலகினர் பெரிதும் மதித்து வருகின்றனர்...

திரையரங்குகள் வேலைநிறுத்தம் மறுபரிசீலனையா? அபிராமி ராம்நாதன் தகவல்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிமுறை நேற்று முதல் நாடெங்கிலும் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி ஆகிய இரண்டையும் கட்ட வேண்டிய நிலையை எதிர்த்து வரும் திங்கள் முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று முன் தினம் அறிவித்தார். இதனால் கடந்த வாரமĮ