close
Choose your channels

யாரும் எதிர்பாராத கூட்டணி.. அண்டை மாநில சூப்பர் ஸ்டாரை இயக்கும் கெளதம் மேனன்..!

Tuesday, May 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அண்டை மாநில சூப்பர் ஸ்டார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கௌதம் மேனன், அதன் பின்னர் ’காக்க காக்க’ ’வேட்டையாடு விளையாடு’ ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ ’வாரணம் ஆயிரம்’ ’விண்ணைத்தாண்டி வருவாயா’ ’என்னை அறிந்தால்’ ’வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் விக்ரம் நடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சில படங்களில் கௌதம் மேனன் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக ’விடுதலை 2’ உட்பட ஒரு சில படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் அடுத்த திரைப்படத்தில் மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த கூட்டணியை யாருமே எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment