close
Choose your channels

கவுதம் மேனனின் அடுத்த 2 படங்கள் யுனிவர்ஸ் படங்கள் தான்: அவரே அளித்த தகவல்..!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’ஜோஷ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படமும் இந்த படத்தை அடுத்து வெளியாக இருக்க படமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது என்றும் இரு படங்களும் யுனிவர்ஸ் படங்கள் என்றும் அவரே தெரிவித்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஜோஷ்வா இமை போல் காக்க’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தயாரான நிலையில் தற்போது தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் வரும் மார்ச் 1ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் மேனன் ’ஜோஷ்வா இமை போல் காக்க’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அதை பார்வையாளர்கள் இரு படங்களையும் பார்க்கும் போது புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து கவுதம் மேனனின் யுனிவர்ஸ் திரைப்படமாக ’ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் அமைந்துள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment